\
அதிமுக உறுப்பினர் இல்லை: தீபாவை அதிர வைத்த தேர்தல் ஆணையம்

அதிமுக உறுப்பினர் இல்லை: தீபாவை அதிர வைத்த தேர்தல் ஆணையம்

அதிமுக உறுப்பினர் இல்லை: தீபாவை அதிர வைத்த தேர்தல் ஆணையம்
Published on

தங்கள் தரப்பை ஆதரியுங்கள் என்று கோரிக்கை விடுத்த தீபா அணியை தேர்தல் ஆணையம் அதிரடியாக நிராகரித்து உள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக அம்மா அணி, புரட்சித் தலைவி அம்மா அணி என இரண்டாக பிரிந்தது. அதனால் யாருக்கு இரட்டை இலை என்ற உரிமைப் போராட்டம் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று அதிரடியாக அதிமுக கட்சி பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் ஒபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இதனால் டிடிவி தினகரன் அணி அதிமுக கட்சி பெயரையும் இரட்டை இலையையும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் நடுவே தங்கள் அணியை அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு தீபா கோரியிருந்தார்.

அதனை விசாரித்த தேர்தல் ஆணையம் தீபா கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத காரணத்தால் அவரது வாதங்கள் ஏற்கப்படவில்லை என்று கூறி மனுவை நிராகரித்துள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com