மணிப்பூர் மாநில தேர்தல் தேதி மாற்றம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மணிப்பூர் மாநில தேர்தல் தேதி மாற்றம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மணிப்பூர் மாநில தேர்தல் தேதி மாற்றம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மணிப்பூரில் முதற்கட்டமாக நடைபெறவிருந்த தேர்தல் தேதியை மாற்றம் செய்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

இந்தியாவில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போது உத்தரபிரதேசத்தில் தேர்தல் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதன்படி, பிப்ரவரி 5ஆம் தேதியிலிருந்து மார்ச் 10ஆம் தேதிவரை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 என இரண்டு கட்டங்களாக நடைபெறுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதற்கட்ட தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியமைத்திருக்கிறது. அதன்படி, முதற்கட்டத் தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 28க்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு திட்டமிட்டபடி மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com