கடும் வெயிலில் பொதுக்கூட்டம் கூடாது- கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

கடும் வெயிலில் பொதுக்கூட்டம் கூடாது- கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

கடும் வெயிலில் பொதுக்கூட்டம் கூடாது- கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
Published on

தேர்தல் நடைபெறுவது கோடைக்காலம் என்பதால், கடுமையான வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ எழுதியுள்ள கடிதத்தில் கடுமையான கோடைக் காலத்தில் வெயில் அதிகமுள்ள நேரத்தில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களால் மக்கள் இன்னலுக்குள்ளாவது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் கடும் வெயிலில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்ட ஒரு சிலர் வெப்பம் தாளாமல் உயிரிழந்தது குறித்தும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, இதைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் வெயில் நேரத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

கடுமையான வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க போதுமான நிழல், குடிநீர், மருத்துவ வசதி போன்றவற்றை ஏற்படுத்துவதும் அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும்போது இந்த பரிந்துரைகளை கருத்தில் கொள்ளும்படி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com