\
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு: தேர்தல் ஆணையம் பரிந்துரை

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு: தேர்தல் ஆணையம் பரிந்துரை

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு: தேர்தல் ஆணையம் பரிந்துரை
Published on

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்தது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் இது தெரியவந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் வேலுமணி, செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீதும் வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வைரக்கண்ணன் என்பவர் கேட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் இவ்வாறு பதிலளித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்தப் பரிந்துரை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com