எப்படியெல்லாம் யோசிங்கிறாங்க! வாக்காளர்களை வியக்க வைக்கும் விதவிதமான தேர்தல் பிரச்சாரங்கள்

எப்படியெல்லாம் யோசிங்கிறாங்க! வாக்காளர்களை வியக்க வைக்கும் விதவிதமான தேர்தல் பிரச்சாரங்கள்
எப்படியெல்லாம் யோசிங்கிறாங்க! வாக்காளர்களை வியக்க வைக்கும் விதவிதமான தேர்தல் பிரச்சாரங்கள்

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் களம் சூடுபிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு இணையாக சுயேச்சைகளும் போட்டு போட்டு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசியல் கட்சி வேட்பாளர்களும் சுயேட்சைகளும் விதவிதமா வித்யாசமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை இங்கு பார்க்கலாம்.

சேலம் மாநகராட்சி:

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்துக்கு உட்பட்ட 28 வது வார்டு திமுக வேட்பாளர் மாநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளருமான ஜெயக்குமார் பால் மார்க்கெட் செவ்வாபேட்டை ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தோற்றம் கொண்ட மேடை கலைஞர்களை அழைத்துச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேளதாளங்கள் முழங்க மேடைக் கலைஞர்களை வைத்து வீதி வீதியாகச் சென்று வித்தியாசமான வகையில் பிரச்சாரம் மேற்கொண்டது பொது மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனா சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மதுராந்தகம் பேருந்து நிலையம் நுழைவாயில் உள்ள விநாயகர் கோயிலுக்கு 108 தேங்காய் உடைத்து அங்குள்ள பூக்கடையில் வேட்பாளர் பூ கட்டி பூ வியாபாரியிடம் வாக்கு சேகரித்தார் அதேபோன்று வன்னியர் பேட்டையில் திருமணம் நடக்க உள்ள பெண்ணுக்கு நலங்கு வைத்து வேட்பாளர் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பின்னர் வீடுவீடாகச் சென்று அதிமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மதுரை:

மதுரையில் 42வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் மூதாட்டி சுசிலாவுக்கு ஆதரவாக அவரது 5 வயது மற்றும் 7 வயது பேத்தி மற்றும் குடும்பத்தினர் பங்கஜம் காலனி பகுதியில் வாக்குகள் சேகரித்தனர். அவரது சின்னமான நாற்காலியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், பிளாஸ்டிக் நாற்காலியை கையில் பிடித்தபடி பேத்திகள் இருவரும் பாட்டிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது அனைவரையும் கவர்ந்தது.

விருதுநகர்:

அருப்புக்கோட்டை 2வது வார்டில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜேஸ்வரி மேளதாளங்களுடம் 2 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாஜகவின் சின்னமான தாமரையை வாக்காளர்களின் மனதில் பதிய வைக்கும் வகையில் வாக்காளர்களுக்கு தாமரை பூ வழங்கியும் காலில் விழுந்து கும்பிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதே போல் 14 வது வார்டு பாஜக வேட்பாளர் சுரேஷ் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் 14 வார்டில் நெசவாளர்களை கவரும் வகையில் ராட்டை நூற்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com