திருமண அழைப்பிதழா தேர்தல் விளம்பரமா? - நெல்லையை கலக்கும் சுயேட்சை வேட்பாளர்

திருமண அழைப்பிதழா தேர்தல் விளம்பரமா? - நெல்லையை கலக்கும் சுயேட்சை வேட்பாளர்
திருமண அழைப்பிதழா தேர்தல் விளம்பரமா? - நெல்லையை கலக்கும் சுயேட்சை வேட்பாளர்

திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு இணையாக நூதன பிரச்சாரத்தால் மக்களைக் கவர்ந்துள்ளார் மாற்றுத்திறனாளி சுயேட்சை வேட்பாளர் சங்கர் சண்முக சுந்தர்.

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் நூதனமாக பல வழிகளில் பரப்புரைகளில் ஈடுபட்டு வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர்.

இந்தப் போட்டியில் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு எந்த விதத்திலும், குறைந்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் கலக்கி வருகின்றனர். நெல்லை மாநகராட்சியில் 37வது வார்டில் போட்டியிடும் மாற்று திறனாளி இளைஞர் சங்கர் சண்முக சுந்தர். இவர் கேடிசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அவர் தேர்தல் நாள் என்பது சாதாரண நாள் இல்லை வீட்டில் நடைபெறும் சுபநிகழ்சிக்கு இணையானது. தங்கள் வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்வது போல் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க தேர்தல் நாளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் திருமண அழைப்பிதழ் போன்று அச்சடித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த அழைப்பிதழில் 'தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்", முகக் கவசம், சமூக இடைவெளி, கொரோனா தொற்று விழிப்புணர்வு இவற்றையும் அச்சிட்டு தனது "வாக்கிங் ஸ்டிக்" சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார். தனது பரப்புரை பற்றி அவர் கூறும் போது, "தமிழக மக்கள் உங்கள் விருப்ப தேர்வு யாராக இருந்தாலும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். தேர்தல் என்பது சுப நிகழ்ச்சி, அந்த சுப நிகழ்ச்சியில் வாக்காளர்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். மாற்றுதிறனாளிகளும் சக மனிதர்கள் போல எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com