கோவை: யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

கோவை: யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

கோவை: யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை
Published on

கோயில் வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர் யானை தாக்கி உயிரிழந்தார்.

கோவை தடாகம் சாலை கணுவாயில் உள்ள ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெரியவரை, இரவு இரண்டு மணியளவில் யானை ஒன்று தாக்கி உள்ளது. அதில் நிலைகுலைந்த அவர் கோயில் வளாக வாட்ச்மேனிடம் அதிகாலை 4 மணி வரை அடிக்கடி தண்ணீர் கேட்டு வாங்கி குடித்துள்ளார். அதன்பின் வாட்ச்மேன் அங்கிருந்து சென்றுவிட்டு 5:30 மணி அளவில் மீண்டும் கோயில் வளாகத்திற்கு வந்து பார்க்கையில் அவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.


இதுகுறித்து தடாகம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் யானை தாக்கி இறந்தவர் சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த நாகராஜ் (55). என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த அவரது உறவினர்கள் இறந்தது நாகராஜ் என்பதை உறுதிசெய்தனர்.


அதனைத்தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார், மேற்கொண்ட விசாரணையில் பெரியவரை யானை தாக்கும்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com