\
சத்துணவு முட்டை விவகாரம்: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

சத்துணவு முட்டை விவகாரம்: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

சத்துணவு முட்டை விவகாரம்: முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
Published on: 

சத்துணவு முட்டை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முட்டை கொள்முதல் விலை உயர்வு காரணமாக பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின்கீழ் வழக்கமாக வழங்கப்படும் முட்டைகள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்தது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கிய முட்டைகள் அழுகி, அவற்றுக்குள் புழுக்கள் நெளிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சத்துணவு முட்டை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com