ஈகையோடு ஆதரவற்றவர்களுக்கு உதவும் ஈகா அமைப்பு..!

ஈகையோடு ஆதரவற்றவர்களுக்கு உதவும் ஈகா அமைப்பு..!

ஈகையோடு ஆதரவற்றவர்களுக்கு உதவும் ஈகா அமைப்பு..!
Published on

வேதாரண்யத்தில் நடைபெற்ற மகிழ்வித்து மகிழ்வோம் நிகழ்ச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட, ஆதரவற்றவர்கள் 38 பேருக்கு முடிதிருத்தம் செய்து புத்தாடையுடன் இனிப்பு வழங்கப்பட்டது. 


நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஈகா டிரஸ்ட் என்ற அமைப்பின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற, மனநலம் குன்றியவர்களுக்கு புத்தாடைகளுடன் இனிப்பு வழங்கும், மகிழ்வித்து மகிழ்வோம் என்ற தேவை அறிந்து சேவை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதில் வேதாரண்யம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதித்தவர்கள் ஆதரவற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு முடிதிருத்தம் செய்து குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதுபோல தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இப்பணியில் ஈகா டிரஸ்ட் அமைப்பினர் செய்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com