புதிய நெல் ரகத்திற்கு ‘எம்.ஜி.ஆர் 100’ என பெயர் சூட்டிய முதல்வர் பழனிசாமி

புதிய நெல் ரகத்திற்கு ‘எம்.ஜி.ஆர் 100’ என பெயர் சூட்டிய முதல்வர் பழனிசாமி

புதிய நெல் ரகத்திற்கு ‘எம்.ஜி.ஆர் 100’ என பெயர் சூட்டிய முதல்வர் பழனிசாமி
Published on

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள நெல் ரகத்திற்கு ‘எம்.ஜி.ஆர் 100’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரிட்டுள்ளார்.

தஞ்சையில் கனமழைக்கு மத்தியில் ‌இன்று ‌நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி உரிமையை உச்சநீதிமன்றம் வரை போராடி பெற்றுத்தந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று குறிப்பிட்டார். விவசாயியான தானும், துணை முத‌லமைச்சர் உள்ளிட்டோரும் விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக கூறினார். அத்துடன் வேளாண் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள புதிய நெல்ரகத்திற்கு ‘எம்.ஜி.ஆர் 100’ என்று பெயரிட்டதாக கூறிய‌ முதலமைச்சர், பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கும்பகோ‌ணத்தில் எம்.ஜி.ஆர் படித்த‌, யானை அடி நகராட்சி தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக‌ தரம் உயர்த்தப்படும் என்றார். அந்த பள்ளிக்கு எம்ஜிஆர் நினைவுப்பள்ளி என பெயர்சூட்டப்படும்‌ என்றும் அவர் கூறினார். இவற்றுடன் ஐந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், சாலைத்திட்டப் பணிகளுக்கான திட்ட அறிக்கைகள் உட்பட நாற்பத்தியெட்டு அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், மணல் குவாரிகளை மூடும் உத்தரவு குறித்து‌ பேசிய முதலமைச்சர், முறைகேடுகளை தடுக்கவே அரசு, குவாரிகளை ஏற்று நடத்தியதாக தெரிவித்தார். 14 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்ற திமுக நினைத்திருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் கொண்டுவந்திருக்க முடியும் என்றும், திமுக அதனை செய்யாதது ஏன்? என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com