நலத்திட்ட உதவிகளில் முதல்முறையாக ஜெ.வுடன் எடப்பாடி படம்
சேலம் மாவட்டத்தில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவி நகலில் முதல்முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
ஆத்தூரில் வருவாய் துறை சார்பில் வழங்கப்பட்ட நலதிட்ட உதவி நகலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன், எடப்பாடி பழனிசாமி படம் இடம்பெற்றிருந்தது அதிமுகவினர் இடையே வியப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன் நலத்திட்ட உதவிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் 20 தேதியில் இருந்து 27 தேதி வரை ஜமாபந்தி நடைபெற்றது. இந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் பெற்ற மனுக்களை விசராணை செய்து, ஆத்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகள் 151 நபர்களுக்கு 6 லட்சத்திற்கான நலத்திட்டங்களை ஆத்தூர் RDO செல்வன் வழங்கினார்.
பொதுமக்களுக்கு வழங்கிய உத்தரவு நகலில் இதுவரை முன்னால் முதல்வர் ஜெயலலிதா படம் மட்டும்தான் இடம்பெற்று வந்தது. ஆனால் இன்று நடைபெற்ற விழாவில் சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக ஜெயலலிதா புகைப்படத்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படமும் இடம் பெற்றிருந்தது அனைவரையும் வியக்கவைத்தது.