\
வெங்கய்யா நாயுடு பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்

வெங்கய்யா நாயுடு பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்

வெங்கய்யா நாயுடு பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்
Published on

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வெங்கய்யா நாயுடுவின் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

வருகின்ற 11ஆம் தேதி வெங்கய்யா நாயுடு குடியரசு துணைத்தலைவராக பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10ஆம் தேதி டெல்லி செல்கிறார். இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com