ஜெவைவிட; எடப்பாடி ஆட்சி சிறப்பானது -திண்டுக்கல் சீனிவாசன்
ஜெயலலிதாவைவிட சிறப்பான முறையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
ஏற்காட்டில் 43 ஆவது கோடைவிழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று தொடங்கியது. இதற்கான விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆசிபெற்ற எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நாள்முதல் மக்களுக்கான திட்டங்களை விரைவாக செயல்படுத்தி வருவதாகவும், ஜெயலலிதா ஆட்சியை விட தற்போது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் புகழாரம் சூட்டினார். ஒவ்வொரு முதல்வருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும் ஆனால் மக்களோடு மக்களாக பழகும் எடப்பாடி பழனிசாமியின் ஸ்டைல் வித்தியாசமானது என்றும் இனி எவருக்கும் அந்த ஸ்டைல் வராது என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

