\
துணிச்சல் மிக்கவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் : ஸ்டாலின்

துணிச்சல் மிக்கவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் : ஸ்டாலின்

துணிச்சல் மிக்கவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் : ஸ்டாலின்
Published on

ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்தநாள் விழா பேசிய  ஸ்டாலின், எதையும் துணிச்சலோடு எதிர்ப்பவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்தந‌ள் ‌விழா, வேலப்பன்சாவடியில் பிரம்மாண்டமாக  கொண்டாடப்பட்டது. அதில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ப.சிதம்பரம், வைகோ ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். 

அப்போது, விழாவில் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எதையும் துணிச்சலோடு எதிர்ப்பவர் இளங்கோவன் என புகழாரம் சூட்டினார். இளங்கோவன் காங்கிரஸ் கட்சிக்காரர் என்றாலும், அவர் திராவிட இயக்கத்தில் பிறந்தவர் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். .

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com