\
சூழ்ச்சிகளைத் தகர்த்து நியாயம் வென்றுள்ளது: துரைமுருகன்

சூழ்ச்சிகளைத் தகர்த்து நியாயம் வென்றுள்ளது: துரைமுருகன்

சூழ்ச்சிகளைத் தகர்த்து நியாயம் வென்றுள்ளது: துரைமுருகன்
Published on: 

2ஜி வழக்கில் சூது, சூழ்ச்சிகளைத் தகர்த்து நியாயம் வென்றுள்ளது என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த 2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து நீதிபதி ஓ.பி.சைனி இன்று உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க, சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார். இதனால் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதுதொடர்பாக பேசிய துரைமுருகன், “எல்லாமே இனி வெற்றிதான். தவறான அரசியல் உள்நோக்கத்தோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது கலங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று கெட்ட எண்ணத்தில் தொடரப்பட்டது இந்த வழக்கு. எவ்வளவோ சூது, சூழ்ச்சிகளை செய்தார்கள். நீண்ட கால வழக்கு வாதத்திற்குப் பிறகு எங்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. நியாயம் வென்றுள்ளது. வெற்றிச் சிறகடித்து வெற்றி பெற்றிருக்கிறோம். பொய் வழக்குகளை போட்டு உடைத்திருக்கிறோம். திமுக இனி நிமிர்ந்து நிற்கும். மீண்டும் வெல்லும்” என்றார். அத்துடன் ஆர்.கே நகரில் வெற்றி பெறுவீர்களா? என்ற கேள்விக்கு, திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர் கூறினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com