ஓபிஎஸ் எப்போது மாடு பிடித்தார்?- பேரவையில் சிரிப்பலையை உண்டாக்கிய துரைமுருகன்

ஓபிஎஸ் எப்போது மாடு பிடித்தார்?- பேரவையில் சிரிப்பலையை உண்டாக்கிய துரைமுருகன்
ஓபிஎஸ் எப்போது மாடு பிடித்தார்?- பேரவையில் சிரிப்பலையை உண்டாக்கிய துரைமுருகன்

ஓபிஎஸை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறார்கள். அவர் எப்போது மாடு பிடித்தார் என சட்டப்பேரவையில் திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியது சிரிப்பலையை உண்டாக்கியது.

கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020-21-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பேரவையில் இன்று பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், ஓபிஎஸை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறார்கள். அவர் எப்போது மாடு பிடித்தார் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சட்டம் நிறைவேற்றி தந்த காரணத்தால் பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறார்கள். துரைமுருகன் புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்க வந்தால் அதற்கான ஏற்பாட்டை செய்து தருகிறேன்” எனத் தெரிவித்தார்.

அதற்கு, ஓபிஎஸ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்று மாடு பிடித்தால் நாங்கள் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நேரில் வந்து பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறோம் என துரைமுருகன் தெரிவிக்க பேரவையில் சிரிப்பலை உண்டாக்கியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com