வருமான வரி சோதனைக்கு எதிராக துரைமுருகன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

வருமான வரி சோதனைக்கு எதிராக துரைமுருகன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

வருமான வரி சோதனைக்கு எதிராக துரைமுருகன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு
Published on

வருமான வரி சோதனைக்கு எதிராக திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி - காந்திநகரில் உள்ள துரைமுருகனின் வீட்டில் இரு தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். மேலும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் அவரது பண்ணை வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகனின் நண்பரும், திமுக பகுதி செயலாளருமான சீனிவாசன் வீட்டில் இன்று வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் வருமான வரி சோதனைக்கு எதிராக திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். தேர்தல் பரப்புரை நேரத்தில் பணிகளை செய்ய விடாமல் சோதனை நடைபெறுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார். வெளியே சென்று தேர்தல் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது ஜனநாயக விரோதம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com