திராவிட இயக்கங்களே தமிழை அழித்தன: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு
திராவிட இயக்கங்கள் தான் தமிழ் மொழியின் அழிவுக்கு கொண்டு சென்றன என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
குன்றத்தூர் ஒன்றிய பா.ஜ.க சார்பில் மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் சி.எம்.சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, தமிழர்களை திராவிட இயக்கங்கள் ஏமாற்றி வருவதாக சாடினார். தமிழகத்தில் இனிதான் ஒரிஜினல் ஆட்சி வரவிருக்கிறது என கூறிய அவர், இனி வரும் அரசியல் வரலாற்றில் மோடிக்கு முன் மோடிக்கு பின் என்றுதான் இருக்கும் என்றார். மேலும் நாட்டில் காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இல்லாமலே போய் விட்டதாக கூறிய அவர், தமிழை வளர்க்கும் கூட்டம் பா.ஜ.க என்றும் தமிழை அழித்த கூட்டம் தி.க., தி.மு.க என்றும் குற்றம்சாட்டினார்.