”வரதட்சணை மேல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துகிறார்கள்” காதல் கணவன் மீது பெண் புகார்

”வரதட்சணை மேல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துகிறார்கள்” காதல் கணவன் மீது பெண் புகார்
”வரதட்சணை மேல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துகிறார்கள்” காதல் கணவன் மீது பெண் புகார்
Published on

தர்மபுரி மாவட்டத்தின் சித்தேரி மலை கிராமத்தில் வரதட்சனை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலைப் பகுதியை சேர்ந்த ராமசுந்தரம், என்பவருடைய மகன் பாபு, கள்ளக்குறிச்சி அடுத்த சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதியினருக்கு பத்து மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவர் பாபு, மாமியார் லட்சுமி மற்றும் சகோதரி கோமதி உள்ளிட்ட குடும்பத்தினர்,  தனலட்சுமியை பணம், நகை கேட்டு வரதட்சணை கொடுமை செய்து வருவதாகவும், கடந்த மூன்றாம் தேதி மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரையில் அடித்து துன்புறுத்தி, குழந்தையை பிடுங்கிக் கொண்டு வீட்டை விட்டு துரத்தியுள்ளதாகவும். இதை அறிந்த கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 அதனைத்தொடர்ந்து மீண்டும் இன்று காலை 7 மணி அளவில் தனலட்சுமி அணிந்திருந்த தாலி, கால் கொலுசை உள்ளிட்டவைகளை பிடுங்கிக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே துரத்தியுள்ளனர். தொடர்ந்து வரதட்ணை என்ற பெயரில் பணம் நகை கேட்டு தன்னை வெளியேற்றிவிட்டு,  தன் கணவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க கணவர் குடும்பத்தினர் திட்டமிட்டிருப்பதாவும் , எனவே, கணவர் குடும்பத்தினரை விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு அரூர் மகளிர் காவல் நிலையயத்தில் தனலட்சுமி தனது குழந்தையுடன் வந்து புகார் மனு அளித்தார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com