"அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க" - செருப்பு மாலையோடு வாக்கு சேகரிக்கும் கம்பம் வேட்பாளர்

"அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க" - செருப்பு மாலையோடு வாக்கு சேகரிக்கும் கம்பம் வேட்பாளர்
"அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க" - செருப்பு மாலையோடு வாக்கு சேகரிக்கும் கம்பம் வேட்பாளர்

அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் எனக்கூறி சீர்மரபினர் நல சங்கத்தைச் சேர்ந்த வேட்பாளர் செருப்பு மாலை அணிந்து தெருக்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் அதிமுக அரசு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு அளித்ததை கண்டித்தும், இதனால் சீர்மரபினர் வாழ்வாதாரம் முற்றிலும் அளிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி பல்வேறு இடங்களில் சீர்மரபினர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் சீர்மரபினர் நல சங்கத்தை சேர்ந்த வேட்பாளர்கள் தொகுதிவாரியாக நிறுத்தப்பட்டு அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் சீர்மரபினர் நல சங்கத்தின் சார்பில் தாவீது ராஜா என்பவர் போட்டியிடுகிறார்.

இவர், தனக்கு அளிக்கப்பட்ட செருப்பு சின்னத்தை மாலையாக அணிவித்து, இலை தழைகளை கட்டிக்கொண்டு உத்தமபாளையம் அருகே உள்ள அணைப்பட்டி கிராமத்தில் செருப்பு சின்னத்திற்கு வாக்கு கேட்பதோடு, அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு அளித்து பிரச்சாரம் செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com