ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யக்கூடாது: முத்தரசன்
எக்காரணம் கொண்டும் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக அதிமுகவினர் ஒரு ஓட்டுக்கு 6,000 ரூபாய் வரை தருவதாக திமுக குற்றம்சாட்டிவருகிறது. பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே ஆர்.கே.நகரில் நியாயமாக தேர்தல் நடைபெறவில்லை என்றால் தேர்தலை நடத்தி பயன் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எக்காரணம் கொண்டும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணப்பட்டுவாடா செய்யும் கட்சிகளின் வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் எனவும் முத்தரசன் கோரிக்கை
விடுத்துள்ளார்.

