காங்கிரஸ் கட்சிக்கான நிதி ஐந்து மடங்கு அதிகரிப்பு - தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை
காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
அரசியல் நன்கொடை தொடர்பாக 57 பக்க அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி சமர்ப்பித்துள்ளது. பாஜக இன்னும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. அந்த அறிக்கையின் படி காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் நன்கொடியாக ரூ146 கோடி கிடைத்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டினை காட்டிலும் 5 மடங்கு அதிகமாக காங்கிரஸ் கட்சிக்கு நிதி கிடைத்துள்ளது. 2017-18 ஆண்டை பொறுத்தவரை பாஜகவுக்கு ரூ144 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு 26 கோடியும் நிதி கிடைத்திருந்தது. கடந்த நிதி ஆண்டு பாஜகவுக்கு ரூ1027 கோடி நிதி கிடைத்தது. கடந்த அண்டு பாரதி ஏர்டெல் சார்பில் பாஜகவுக்கு 144 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு 10 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு டாடா குழுமத்தின் சார்பில் ரூ55 கோடியும், பாரதி ஏர்டெல் குழுமத்தின் சார்பில் ரூ39 கோடியும், ஆதித்யா பிர்லா டிரஸ்ட் மற்றும் சம்ராஜ் சார்பில் தலா ரூ2 கோடியும் நன்கொடையாக காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி தலா ரூ54,000 கொடுத்துள்ளனர். கபில் சிபில் ரூ2 லட்சமும், மனிஷ் திவாரி மற்றும் பவன் பன்சால் தலா 35,000 ரூபாயும் வழங்கியுள்ளனர். சித்து மற்றும் அவரது மனைவி தலா ரூ35 ஆயிரம் கொடுத்துள்ளனர்.