\
பேப்பர் படிக்கக்கூடாது துரைமுருகனுக்கு கண்டிப்பு !

பேப்பர் படிக்கக்கூடாது துரைமுருகனுக்கு கண்டிப்பு !

பேப்பர் படிக்கக்கூடாது துரைமுருகனுக்கு கண்டிப்பு !
Published on

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயத்தில் இன்று போட்டி சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்தினர்.

இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை ஏற்படுத்திக்கொண்டு சட்டப்பேரவையில் நிகழும் அலுவல்களை நிகழ்த்தினர். முன்னதாக போட்டி சட்டமன்றம் கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழ்ந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சட்டப்பேரவை சபாநாயகராக சக்கரபாணி தேர்வு செய்யப்பட்டு சட்டப்பேரவை நிகழ்வுகளை நடத்தினார். அப்போது பொறுப்பு சபாநாயகர் சந்திரசேகரன், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் பேப்பர் படிக்க கூடாது என்றவுடன் அவர் செய்தித்தாளை மடித்து வைத்துக்கொண்டார். அப்போது பேரவையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com