”நல்ல நண்பன் வேண்டுமென்று..” வெள்ளத்தில் மூழ்க இருந்த நண்பனை மீட்ட நாயின் நெகிழ்ச்சி செயல்

”நல்ல நண்பன் வேண்டுமென்று..” வெள்ளத்தில் மூழ்க இருந்த நண்பனை மீட்ட நாயின் நெகிழ்ச்சி செயல்
”நல்ல நண்பன் வேண்டுமென்று..” வெள்ளத்தில் மூழ்க இருந்த நண்பனை மீட்ட நாயின் நெகிழ்ச்சி செயல்

செல்லப்பிராணிகளிலேயே மிகவும் பாசமாகவும் அன்பாகவும் இருக்கக் கூடியது நாய் என எவருமே அறிவர். அதுவும் நன்றிக்கு உதாரணமான ஒரு உயிரினம் என்றால் நாய்களையே சுட்டிக்காட்டுவது வழக்கம். சாலைகளில் செல்லும் போது இரண்டு பிஸ்கட் துண்டுகளை கொடுத்தாலே மறுநாள் அதே வழியில் செல்லும் போது வாலை ஆட்டி தன்னுடைய நன்றியை செலுத்த நாய்கள் எப்போதும் தவறுவதில்லை.

இது தொடர்பான பல வீடியோக்கள், பதிவுகள், மீம்ஸ்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக காணக்கிடக்கின்றன. இப்படி இருக்கையில், தன்னுடைய சக உயிரினம் ஒன்று ஆபத்தில் இருக்கும் போது சமயோசிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு 20 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.

2 மில்லியனுக்கு மேல் பார்க்கும் அளவுக்கு அப்படி என்ன அந்த வீடியோவில் இருந்தது என்பதை தற்போது காணலாம். ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றிருக்கும் போது பாறைகளின் மீது இரண்டு வெள்ளை மற்றும் கருநிற நாய்கள் இருந்திருக்கின்றன. அதில் கருப்பு நாய் ஒன்று ஆற்று நீரில் அடித்து வரப்படும் மரக்கிளையை எடுக்க நீந்திச் சென்றிருக்கிறது.

Dog Saves Friend from Drowning pic.twitter.com/3aE07tUN5p
— Gabriele Corno (@Gabriele_Corno) September 26, 2022

மரக்கிளையை கவ்வியபடி திரும்பிய போது வெள்ளத்தில் சிக்கி மூழ்கும் நிலைக்குச் சென்றிருக்கிறது. இதனைக் கண்ட பாறை மீதிருந்த மற்றொரு நாய், வெள்ளத்தில் மூழ்கப்பட இருந்த கருநிற நாயை காப்பாற்றுவதற்காக அந்த மரக்கிளையை அழுத்தமாக கவ்வி மேலே எழுந்து வரச் செய்திருக்கிறது.

இந்த வீடியோவை கேப்ரியல் கோர்னோ என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்து, “நீரில் மூழ்க இருந்த தன்னுடைய நண்பனை நாய் காப்பாற்றியிருக்கிறது” எனக் கேப்ஷன் இட்டிருக்கிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் நாயின் திறனை பாராட்டி இருந்தாலும், நாய் தண்ணீரில் மூழ்கும் அளவுக்கு இருக்கும் போது அதனை முதலில் காப்பாற்றாமல் வீடியோ எடுப்பதுதான் அத்தனை அதிமுக்கியமான வேலையா என்றும் தங்களது கருத்துகளை காட்டமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

Why is the camera man not helping?
— hchrisransford (@hchrisransford) September 26, 2022

Even if it is a set up and labs like to swim, what if the dog hit his head, or accidentally drowned?
— Zuzubug  (@Zuzubug13) September 26, 2022

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com