“பயிற்சிக்கு லேட்டாக வந்த ஜடேஜாவுக்கு வார்னே கொடுத்த ஷாக் தண்டனை”- அக்மல் பகிர்ந்த அனுபவம்

“பயிற்சிக்கு லேட்டாக வந்த ஜடேஜாவுக்கு வார்னே கொடுத்த ஷாக் தண்டனை”- அக்மல் பகிர்ந்த அனுபவம்
“பயிற்சிக்கு லேட்டாக வந்த ஜடேஜாவுக்கு வார்னே கொடுத்த ஷாக் தண்டனை”- அக்மல் பகிர்ந்த அனுபவம்

இன்று மும்பையில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 15-வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை அணியை ஜடேஜா வழி நடத்த உள்ளார். இந்நிலையில் முதல் சீசனில் நடைபெற்ற மறக்க முடியாத ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார் ஜடேஜாவின் சக வீரரான கம்ரான் அக்மல். 

முதல் சீசனில் ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். அந்த அணியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஷேன் வார்னே வழிநடத்தி இருந்தார். அந்த அணியில் முன்னாள் பாகிஸ்தான் வீரரான கம்ரான் அக்மல் விளையாடி இருந்தார். 

“பயிற்சியானாலும் சரி மற்றும் அணியின் முக்கிய கூட்டமானாலும் சரி வார்னேவுக்கு எல்லோரும் குறித்த நேரத்துக்கு வந்து விட வேண்டும். ஆனால் ஒருநாள் அணியினர் பயிற்சிக்கு கிளம்பிய போது யூசுப் பதான் மற்றும் ஜடேஜா சொன்ன டைமுக்கு வரவில்லை. கொஞ்சம் லேட்டாக வந்திருந்தார்கள். அதனால் பேருந்து புறப்படுவதில் கொஞ்சம் தாமதம். அப்போது வார்னே எதுவும் சொல்லவில்லை. பயிற்சி முடிந்து எல்லோரும் பேருந்தில் விடுதிக்கு திரும்பினோம். 

அப்போது பேருந்தை நிறுத்த சொன்ன வார்னே ஜடேஜா மற்றும் பதானை நடந்தே விடுதிக்கு வர சொல்லி இறக்கி விட்டார்” என தெரிவித்துள்ளார் அக்மல். 

வார்னே தலைமையிலான ராஜஸ்தான் அணி முதல் சீசனில் கோப்பையை வென்று அசத்தியது. அப்போது முதலே அந்த அணி கோப்பையை வெல்ல தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதனை அக்மல் ஒரு ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com