அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க: கை கால்களில் விலங்கிட்டு நூதன போராட்டத்தல் ஈடுபட்ட சுயேட்சை
சீர்மரபினர் நலச்சங்கத்தினர் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கை கால்களில் சங்கிலி விலங்கிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக-விற்கு வாக்களிக்க கூடாது என அதிமுகவிற்கு எதிராக தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வந்த சீர்மரபினர் நலசங்கத்தை சேர்ந்த வேட்பாளர் தாவீது ராஜா இன்று பரப்புரை நிறைவு நாளையொட்டி வ.உ.சி திடல் முன்பு கை, கால் மற்றும் கழுத்துகளில் சங்கிலி விலங்கிட்டு நூதன முறையில் அதிமுகவிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இட ஒதுக்கீட்டில் சீர்மரபினர் வகுப்பினருக்கு முறையான இட ஒதுக்கீடு தராமல் அவர்கள் வாழ்வாதாரத்தை நசுக்குவதாக கூறி அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நூதன முறையில் சீர்மரபினர் நல சங்கத்தை சேர்ந்தவர்களும் அதன் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தாவீது ராஜா என்பவரும் போராட்டம் நடத்தினர்.