\
"எனது அனுமதி கடிதம் இல்லாத விளம்பரத்தைப் பெறாதீர்கள்!" - வானதி ஸ்ரீனிவாசன் 'அலர்ட்' கடிதம்

"எனது அனுமதி கடிதம் இல்லாத விளம்பரத்தைப் பெறாதீர்கள்!" - வானதி ஸ்ரீனிவாசன் 'அலர்ட்' கடிதம்

"எனது அனுமதி கடிதம் இல்லாத விளம்பரத்தைப் பெறாதீர்கள்!" - வானதி ஸ்ரீனிவாசன் 'அலர்ட்' கடிதம்
Published on

தனது அனுமதி கடிதம் இல்லாமல் தன்னைச் சார்ந்த விளம்பரங்களை பிரசுரிக்க வேண்டாம் என கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து பத்திரிகைகளுக்கு அனுப்பிய கடிதத்தில், “சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான என்னை ஆதரித்து 02/04/2021 - 04/04/2021 ஆகிய தேதிகளில், எனது அனுமதி கடிதம் இன்றி யார் விளம்பரம் அளித்தாலும் அதை பெற்றுக்கொள்ள வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வானதி ஸ்ரீனிவாசன் பெயரில் தேர்தல் செலவு கணக்குகளை அதிகரிக்க, இவ்வாறான நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடக்கூடும் என்பதால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதிஸ்ரீனிவாசன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com