Delhi metro atrocity
Delhi metro atrocity @nitishshekawa1, Twitter

பொதுவெளியில் செய்யும் செயலா இது? ரயிலில் முத்தமிட்ட காதலர்கள் - மெட்ரோ நிர்வாகம் அதிரடி

பிற பயணிகள்முன்பு ஆபாச செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு டெல்லி மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Published on

டெல்லி மெட்ரோ ரயில் பெட்டிக்குள் தரையில் அமர்ந்து காதல் ஜோடிகள் முத்தமிட்ட காட்சிகள் இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே டெல்லி மெட்ரோ ரயிலில் நடக்கும் அட்ராசிட்டிகள் குறித்த வீடியோக்கள் இணையங்களில் பரவி வைரலாகி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இளம்ஜோடிகளின் வீடியோ ஒன்று மெட்ரோ ரயில் நிர்வாகத்தையே நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு கொண்டுபோயுள்ளது. அந்த வீடியோவில், மெட்ரோ ரயில் பெட்டியின் தரையில் அமர்ந்திருந்த காதலனின் மடியில் படுத்துக்கொண்டுள்ளார். தேதி குறிப்பிடப்படாத இருவரும் முத்தமிடும் அந்த வீடியோ காட்சிகள் இணையவாசிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறது. அந்த ஜோடிமீது நடவடிக்கை எடுக்குமாறு, DMRC கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

Delhi Metro
Delhi MetroPixabay

இதுகுறித்து DMRC வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டெல்லி மெட்ரோவில் பயணிப்போர் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சமூக பொறுப்பு மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதேபோல் பிற பயணிகளுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது மற்ற சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய எந்தவொரு அநாகரீகமான/ஆபாசமான செயலிலும் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபடுவர்கள்மீது மெட்ரோ ரயில்வே ஊழியர்களிடம் புகாரளிக்கலாம்.

அதனை மீறி தவறான செயல்களில் ஈடுபட்டால் டிஎம்ஆர்சியின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புச் சட்டம், பிரிவு 59ன் கீழ் அநாகரீகம் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்” என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com