திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் - கருத்துக் கணிப்பில் தகவல்

திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் - கருத்துக் கணிப்பில் தகவல்
திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் - கருத்துக் கணிப்பில் தகவல்

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியும், சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் அமைப்பான பண்பாடு மக்கள் தொடர்பகம் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக, பண்பாடு மக்கள் தொடர்பகம் கருத்துக் கணிப்பு நடந்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில், திமுக தலைமையிலான கூட்டணி 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணி 3 முதல் 5 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு என்றும் அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அமமுக 2 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் பண்பாடு மக்கள் தொடர்பகம் கூறியுள்ளது. இதேபோல 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக 2 அல்லது 3 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் அமமுக 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. கணிக்க முடியாத தொகுதிகளாக இரண்டு தொகுதிகள் இருப்பதாகவும், கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக பண்பாடு மக்கள் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள சூழலில் தமிழகத்தில் யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு மு.க. ஸ்டாலின் - 31%,  இபிஎஸ் ஓபிஎஸ் - 22%, டிடிவி - 20% என முதல் மூன்று இடங்களில் உள்ளனர். மத்திய அரசின் செயல்பாட்டை பொறுத்தவரை 87% அதிருப்தி என்றும், 10% பேர் திருப்தி என்றும் 3% பரவாயில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com