ஆர்.கே.நகரில் திமுக அமோக வெற்றி பெறும்: மருதுகணேஷ்

ஆர்.கே.நகரில் திமுக அமோக வெற்றி பெறும்: மருதுகணேஷ்

ஆர்.கே.நகரில் திமுக அமோக வெற்றி பெறும்: மருதுகணேஷ்
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என வாக்களித்த பின் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருதுகணேஷ், “ ரூ.6,000 அல்ல ரூ.60,000 கொடுத்தாலும் ஆர்.கே.நகர் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என நம்புகிறேன். தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் ” என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com