\
சட்டப்பேரவையில் மீனவர் பிரச்னை விவாதம்: திமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் மீனவர் பிரச்னை விவாதம்: திமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் மீனவர் பிரச்னை விவாதம்: திமுக வெளிநடப்பு
Published on: 

சட்டப்பேரவையில் இருந்து ஜெ. அன்பழகன் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பில் ஈடுபட்டனர். 
அவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, மீனவர் பிரச்னை தொடர்பாக பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என கருணாநிதி கூறியதாகக் குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த கே.பி.பி.சாமியை அனுமதிக்குமாறு வலியுறுத்தினர். இதனை ஏற்காத துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் குறிப்பிட்ட வார்த்தையையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க மறுத்துவிட்டார். அப்போது திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவை மாண்புகளை மீறி நடந்துகொண்டதாக கூறி அவரை வெளியேற்றவும் துணை சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com