\
திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
Published on

திமுக பொருளாளர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் கடந்த ஜனவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மீண்டும் சீறுநீரக தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது உடல்நலக் குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில் இன்று மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com