திமுக பெரிய பிளவை சந்திக்கவுள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திமுக பெரிய பிளவை சந்திக்கவுள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திமுக பெரிய பிளவை சந்திக்கவுள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
Published on

திமுக பெரிய பிளவை சந்திக்கவுள்ளது என்றும் திமுக கூட்டணி கட்சிகள் பல தங்களுடன் வர உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ  பேசும் போது “ அதிமுகவில் பிரிவுகள் எதுவும் இல்லை என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். இரண்டு முறை சின்னம் முடக்கப்பட்டு, மீண்டும் சின்னத்தை பெற்று ஆட்சியை பிடித்த வரலாறு அதிமுகவிற்கு தான் உண்டு. ஜெயலலிதா மறைவுக்கு பின் பிரிந்தோம்,சேர்ந்தோம் ஆட்சியை பிடித்துள்ளோம். கருணாநிதி மறைவுக்கு பின்னர் மு.க.ஸ்டாலினால் குடும்பத்தினை கூட கட்டுப்படுத்த முடியவில்லை. மு.க. அழகிரி தனித்து உள்ளார். மு.க.ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் பனிப்போர் நடைபெற்று கொண்டு இருக்கிறது. கனிமொழிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் முன்னிலைப்படுத்துகிறார். வி.பிதுரைசாமி, கு.க.செல்வம் வெளியேறிவிட்டனர். துரைமுருகன் அமைதியாக இருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் சறுக்கலை சந்தித்தாலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக பெரிய பிளவை சந்திக்கவுள்ளது. திமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகள் அவர்களுடன் இருக்க போவதில்லை, அங்கு இருக்கும் பெரும்பாலான கட்சிகள் எங்களுடன் வரப்போகிறது. இதையெல்லாம் தெரிந்து தான் அதிமுகவில் ஒற்றுமை இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். என்று தெரிவித்தார்.

திரையரங்கம் திறப்பு குறித்த கேள்விக்கு “ இந்திய அளவில் திரையரங்கு திறப்பது பற்றி ஒரு முடிவு எட்டப்படவில்லை என்றும் கொரோனா நோய் தாக்கத்தினை குறைவினை பொறுத்து திரையரங்கு திறப்பது குறித்த முடிவை முதல்வர் எடுப்பார் என அவர் பேசினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com