\
ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு திமுக ஆதரவு: ஸ்டாலின்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு திமுக ஆதரவு: ஸ்டாலின்

ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு திமுக ஆதரவு: ஸ்டாலின்
Published on: 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவின் அனைத்து கோரிக்கைகளையும், தமிழக அரசு உடனடியாக‌‌ நிறைவேற்றவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்‌ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அரசு ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக போராடும் அவலநிலை உருவாகி வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் இது போன்ற போராட்டங்க‌ளை கையாளும் தகுதியோ, திறமையோ இல்லாத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, விரைவில் வீட்டுக்கு செல்வதே அனைத்து தரப்பினருக்கும் நல்லது. தமிழகத்தில் விரைவில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் நலனும் காக்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com