மும்மொழிக் கொள்கையை எதிர்த்த முதல்வருக்கு நன்றி - ஸ்டாலின்

மும்மொழிக் கொள்கையை எதிர்த்த முதல்வருக்கு நன்றி - ஸ்டாலின்

மும்மொழிக் கொள்கையை எதிர்த்த முதல்வருக்கு நன்றி - ஸ்டாலின்
Published on

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.
மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதிய கல்விக்கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் முதலமைச்சர் பழனிசாமிக்கு இன்று கடிதம் அனுப்பியிருந்தனர். அதையடுத்து நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை எனவும் இருமொழிக்கொள்கையே தொடரும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com