\
உட்கட்சி பூசல்: திமுக முன்னாள் எம்பி வீட்டில் குண்டு வீச்சு

உட்கட்சி பூசல்: திமுக முன்னாள் எம்பி வீட்டில் குண்டு வீச்சு

உட்கட்சி பூசல்: திமுக முன்னாள் எம்பி வீட்டில் குண்டு வீச்சு
Published on

சேலத்தில் திமுக முன்னாள் எம்.பி டி.எம். செல்வகணபதி வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அதில் அங்கிருந்த கார், இருசக்கர வாகனம் தீபிடித்து எரிந்தன. தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
சேலத்தில் உட்கட்சி பூசலால் திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தரப்பினருக்கும், செல்வகணபதி தரப்பினருக்கும் இடையே நேற்று காலை மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரவில் செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராஜேந்திரனின் ஆதரவாளர்கேளே தாக்குதல் நடத்தியிருக்கலாம் என செல்வகணபதி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com