ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம்

ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம்
ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம்

தருமபுரியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றதில் இருந்தே மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர் என பல மாவட்டங்களில் இதுவரை அவர் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் ஆளுநரின் ஆய்வுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறி ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கான பணிகளில் தலையிடுவதாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆனால் ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கிடையே, தருமபுரியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பறைகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com