8 மாவட்டங்களில் திமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

8 மாவட்டங்களில் திமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
8 மாவட்டங்களில் திமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான 8 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பணமதிப்பிழப்பு தினமான நவம்பர் 8-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாகப்பட்டிணம், திருவாரூர், ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருப்புச்சட்டை அணிந்து பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பை காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2016) நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அப்போது அறிவிக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நாளை மறுநாளுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com