ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: மு.க.ஸ்டாலின்

ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: மு.க.ஸ்டாலின்

ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: மு.க.ஸ்டாலின்
Published on

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து மனு அளித்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “அண்மையில் நடந்த வருமானவரிச் சோதனைகள் தொடர்பான மனுவை ஆளுநரிடம் அளித்தேன். கோரிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். அரசுப் பணி டெண்டர்கள் முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டதா..? என்பது பற்றி விசாரிக்க கோரியும், சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழகத்தில் நாங்கள் ஆட்சி செய்த காலத்தில் அமைச்சர்களின் உறவினர்கள் யாருக்கும் அரசுப் பணி டெண்டர்கள் கொடுக்கப்படவில்லை” என்றார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அதில் 180 கோடி ரூபாய் பணம் மற்றும் 105 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com