\
“பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு நா கூசவில்லையா?" - மு.க.ஸ்டாலின்

“பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு நா கூசவில்லையா?" - மு.க.ஸ்டாலின்

“பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு நா கூசவில்லையா?" - மு.க.ஸ்டாலின்
Published on

"சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் அதிமுக ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்வதற்கு நா கூசவில்லையா?" என திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரப்புரையின் போது ஆளும் கட்சியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். 

வேலூர் மற்றும் அதனை சார்ந்துள்ள சட்டமன்ற தொகுதிகளில் வரும் தேர்தலுக்கு போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு. க. ஸ்டாலின் பரபுரை மேற்கொண்டிருந்தார். அப்போது 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அக்கிரமங்கள் என சொல்லி அந்த காலகட்டத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி பேசி இருந்தார். 

குறிப்பாக சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் இந்த ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக சொல்வதற்கு நா கூசவில்லையா? எனவும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com