\
திமுக ஊராட்சித் தலைவர் வெட்டிக்கொலை : பட்டப்பகலில் சம்பவம்..!

திமுக ஊராட்சித் தலைவர் வெட்டிக்கொலை : பட்டப்பகலில் சம்பவம்..!

திமுக ஊராட்சித் தலைவர் வெட்டிக்கொலை : பட்டப்பகலில் சம்பவம்..!
Published on

சென்னையை அடுத்த ஆவடி அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஆவடி அருகேயுள்ள கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரமகுரு. ஊராட்சி செயலாளரான இவர், கொசவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் இன்று மாலை கொசவம்பாளையம் ஊராட்சியில் நடைபெறும் கால்வாய் பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பரமகுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த திருநின்றவூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரை வெட்டி கொலை செய்தது யார் ? எதற்காக கொலை அவர் செய்யப்பட்டார் ? ஆகிய கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com