\
ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்பி: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்பி: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்பி: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
Published on

வாக்கு சேகரிப்பின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கிய நாமக்கல் திமுக எம்பி இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்கள், கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்.பி ஏ.கே.பி சின்ராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் திருச்செங்கோடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அவரை வரவேற்று பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுக்க, தனது பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்த எம்பி அதை தனது உதவியாளரிடம் வழங்கினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com