டிரெண்டிங்
திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு
திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் இன்று அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார். ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதனிடையே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மூத்த வழக்கறிஞர்களுடம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று தெரிவித்தார்.