\
நீதிமன்ற உத்தரவை அடுத்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து

நீதிமன்ற உத்தரவை அடுத்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து

நீதிமன்ற உத்தரவை அடுத்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து
Published on: 

இன்று மாலை நடைபெறுவதாக இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்வதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரிய திமுகவின் மனு மீதான விசாரணையின்போது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்ற உத்தரவு, மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், வழக்கின் விசாரணை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மாலையும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com