ஆர்.கே.நகரில் ஆளும்கட்சி விதிமீறல்: திமுக புகார்

ஆர்.கே.நகரில் ஆளும்கட்சி விதிமீறல்: திமுக புகார்

ஆர்.கே.நகரில் ஆளும்கட்சி விதிமீறல்: திமுக புகார்
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விதிமுறைகளை ஆளும் கட்சியினர் மீறுகின்றனர் என மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததாக திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு தெரிவித்தார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் மருதுகணேஷூம், அதிமுக சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதாலும், இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியுடனும் ஆர்.கே நகரில் வெற்றி பெற வேண்டும் என அதிமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதேபோன்று ஜெயலலிதா என்ற தலைமை இல்லாதை கருத்தில் கொண்டும், தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தியும், கூட்டனிக்கட்சிகளின் வலிமையுடனும் வெற்றி பெற வேண்டும் என திமுக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் ஆர்.கே நகரில் அதிமுக மற்றும் திமுக இடையிலான போட்டி சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த பிரஷர் குக்கர் சின்னத்திலேயே வெற்றி பெறுவேன் என தினகரன் கூறி வருகிறார்.

இந்நிலையில் திமுக எம்எல்ஏக்களான எ.வே.வேலு, கு.க.செல்வம், சுதர்சனம் மற்றும் திமுக வழக்கறிஞர் செயலாளர் கிரிராஜன் ஆகியோர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் பேசிய எ.வ. வேலு, எந்தக் காரணத்திற்காக முன்பு தேர்தல் நிறுத்தப்பட்டதோ, அதேநிலைதான் தற்போது நீடிப்பதாகக் குற்றம்சாடினார். மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக செயல்வீரர் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு 500 ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாவும், வாக்காளர்களின் அடையாள அட்டை, செல்போன் நம்பர் உள்ளிட்டவைகளைப் அதிமுகவினர் பெற்றுச் செல்வதாகவும் குற்றம்சாட்டினார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com