ஜெயக்குமாருக்கு பொருளாதாரம் தெரியவில்லை: திமுக எம்.எல்.ஏ. பேட்டி

ஜெயக்குமாருக்கு பொருளாதாரம் தெரியவில்லை: திமுக எம்.எல்.ஏ. பேட்டி
ஜெயக்குமாருக்கு பொருளாதாரம் தெரியவில்லை: திமுக எம்.எல்.ஏ. பேட்டி

மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் புதிய தலைமுறைக்கு பேட்டி

கேள்வி: பட்ஜெட் குறித்து உங்கள் பார்வை?

பிடிஆர்:  கடந்த 3 ஆண்டுகள் புள்ளிவிவரங்களை கொண்டு அண்மையில் இந்தியா முழுவதும் 31 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் மாநிலத்தின் வருவாய் குறைந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று 4% வளர்ச்சி மட்டுமே உள்ளது என தெரியவந்திருக்கிறது

கேள்வி: அரசின் கடன் 3.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது ஆனால்  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்திற்குள் இருக்காலம் என்ற விதியில் 22.5% இருப்பதாக நிதியமைச்சர் சொல்கிறாரே?

பிடிஆர்: ஜெயலலிதா இருக்கும் வரை 2014 வரை ஓரளவு கட்டுக்குள் இருந்தது. ,மொத்த GDP யில் 16% , 17% என்று தான் இருந்தது ஆனால் தற்போது 22.5% என்ற அபாயக் கட்டத்தில் இருக்கிறது. ரயில் விபத்தாகும் விபத்தாகும் சொல்றாங்க ஆனா விபத்து வரை செல்லலாமா என்பதே என் கேள்வி

கேள்வி: ஜிஎஸ்டி யில் இணைந்த காரணத்தால் பாதிப்பில்லை, 50 ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறாரே?

பிடிஆர்:ஜிஎஸ்டி அமலாகி முழுவதுமாக ஓராண்டு கூட ஆகவில்லை, அனுமானத்தின் அடிப்படையில் சொல்கிறார். இந்த அரசு சில ஆண்டுகளாகவே அரசின் கணிப்புகளுக்கும் திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட்டிற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. கடந்தாண்டு 1.63 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்று கணித்து பட்ஜெட் போட்டார்கள் ஆனால் 1.40 லட்சம் கோடி ரூபாய் தான் கிடைத்தது. 25₹ ஆயிரம் கோடி தப்பாகவா கணக்கு போடுவார்கள் 

எனவே ஜிஎஸ்டி யால் கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளதாக கூறும் ஜெயக்குமாருக்கு பொருளாதாரம் தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com