டிரெண்டிங்
பாஜகவில் இணையும் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்?: மறுப்பு தெரிவிக்கும் திமுக வட்டாரம்!
பாஜகவில் இணையும் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்?: மறுப்பு தெரிவிக்கும் திமுக வட்டாரம்!
சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவில் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் கு.க.செல்வம் அதிருப்தியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் டெல்லி சென்றுள்ளதாக தெரிகிறது. பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகனும் டெல்லி சென்றுள்ளார்.
ஆனால் அவர் பாஜகவில் இணைவது குறித்த கேள்விக்கு திமுக வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றன. கு.க.செல்வம் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சென்னை, வடபழனியில் உள்ள அறிஞர் அண்ணா பொதுநல மன்றத்தின் செயலாளராக 2009 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.