\
திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதர் குமார் ஆகியோர் கோயில் நிலத்தில் சாலை அமைக்க 50 பேருடன் வந்துள்ளனர். இதனை திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மற்றும் ஊர் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்துள்ளது. இதில் லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு குண்டு காரிலும், இன்னொரு குண்டு ஸ்ரீநிவாசன் என்பவரின் முதுகு பகுதியில் பட்டதாகச் சொல்லப்பட்டது.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக எம்.எல் ஏ இதயவர்மன் மீது 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த. காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்ட 11 பேரின் ஜாமீன் மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com