\
அதிமுகவில் நம்பர் ஒன், 420-க்குதான் போட்டி: ஜெ.அன்பழகன் அட்டாக்!

அதிமுகவில் நம்பர் ஒன், 420-க்குதான் போட்டி: ஜெ.அன்பழகன் அட்டாக்!

அதிமுகவில் நம்பர் ஒன், 420-க்குதான் போட்டி: ஜெ.அன்பழகன் அட்டாக்!
Published on

அ.தி.மு.க.வில் நம்பர்-1, ஃபோர் டிவென்டி யார் என்பதில்தான் அவர்களுக்குள் போட்டி நிலவுகிறது என்று திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கூறினார்.

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதை மாவட்ட கழக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க.வில் உள்ள 3 அணியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். டி.டி.வி.தினகரன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ஃபோர் டிவென்டி என்கிறார். எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரனை ஃபோர் டிவென்டி என்கிறார். இவர்களை பார்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி, ஃபோர் டிவென்டி என்கிறார்கள். மொத்தத்தில் அதிமுகவில் உள்ள 3 அணியுமே ஃபோர் டிவென்டி தான். அதிமுகவில் நம்பர்-1, ஃபோர் டிவென்டி யார் என்பதில்தான் அவர்களுக்குள் போட்டி நிலவுகிறது’ என்றார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com