’பொன்னேரியை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கூடாது’ - அறிவாலயத்தில் திமுகவினர் கோஷமிட்டதால் பரபரப்பு

’பொன்னேரியை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கூடாது’ - அறிவாலயத்தில் திமுகவினர் கோஷமிட்டதால் பரபரப்பு

’பொன்னேரியை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கூடாது’ - அறிவாலயத்தில் திமுகவினர் கோஷமிட்டதால் பரபரப்பு
Published on

பொன்னேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கோஷமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

பொன்னேரி தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கக்கூடாது என திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி தொண்டர்கள் ஆவேசமாக கோரிக்கையை முன்வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளின் பெயர்களை அறிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக தொகுதி ஒதுக்கீடு குழு உறுப்பினர்களான ஏ.வ.வேலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த சென்ற போது திமுக தொண்டர்கள் கோரிக்கையை முன்வைத்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர்களை அறிவாலய காவலர்கள் வெளியேற்றினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com